இன்று காலை வெளியாகிறது கங்குவா படத்தின் 2nd லுக் போஸ்டர்..! 

 
1

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் தான் கங்குவா.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .பல ஆக்சன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்ற கங்குவா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவு செய்தார். இதனை நடிகர் சூர்யாவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவதால் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த கங்குவா படுக்குழு இப்படத்தின் 2nd லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

நீண்ட நெடு நாட்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து எப்ப தான் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கப்போகிறோம் என ஏக்கத்தில் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று இப்படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியாக உள்ளது ரசிகர்கள்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.


 

From Around the web