மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க போகும் 90-ஸ் கனவுக்கன்னி..! 

 
1
1993ம் ஆண்டே உழவன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இருந்தார் நடிகை ரம்பா. தனது 15 வயதில் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து மாஸ் காட்டினார்..

15 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், போஜ்புரி, இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்…அனைவரது பிடித்தமான நடிகைகள் பட்டியலில் இவரும் இருந்தார்…

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பா ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்ட 2 மகள்கள் மற்றும் மகன் பெற்றார்….வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்துவரும் நடிகை ரம்பா தற்போது மீண்டும் நடிக்க வர இருப்பதாக கூறப்படுகிறது…அவர் எப்போவாவது டிவி நிகழ்ச்சியில் வருவார்..இப்போது மீண்டும் வருவது பற்றி தகவல் வந்து இருக்கின்றது..

சினிமாவை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இப்போது சினிமாவில் டிரெண்ட் மாறியிருக்கிறது.அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் இனி அதனை செய்ய இருப்பதாகவும் சொல்லியுள்ளார்…

என் வயதுக்கு ஏற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன் என ரம்யா கூறிவருகிறார்…அதனால் விரைவில் நீங்கள் எதிர்பார்த்தது போல நடிக்க ரெடி என சொல்லியுள்ளார் நடிகை ரம்பா.

From Around the web