நிகழ்ச்சியில் சட்டையை விலக்கி மனைவி மேல் அன்பை வெளிப்படுத்திய நடிகர்..!

 
யோகேஷ் மற்றும் மைனா நந்தினி

மனைவி மீதிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பிரபல கணவர் செய்துள்ள துணிகரச் செயல் பல்வேறு நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களி நடித்து வந்தவர் நந்தினி. சீரியலுக்கு வந்த பிறகு இவர் ரசிகர்களிடையே பிரபலமானார். சரவனன் மீனாட்சி என்கிற சீரியலில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் தோன்றினார். இது அவருக்கு பெரியளவில் புகழை பெற்று தந்தது. இதன்மூலம் இவர் மைனா நந்தினி ஆனார்.

தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த மைனா நந்தினி, உடன் நடித்த யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்கள் சின்னத்திரை உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வருகின்றனர்.இருவரும் இணைந்து மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சி பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் மைனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கணவர் யோகேஷுடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகர் யோகேஷ் தன்னுடைய மார்பில் மனைவி மைனா நந்தினியின் உருவத்தை டாட்டூவாக வரைந்துள்ளார். இது சற்றும் எதிர்பார்க்காத ஒரு சர்பரைஸ் என்று தன்னுடைய இன்ஸ்டா பதிவில் நந்தினி குறிப்பிட்டுள்ளார்.

From Around the web