பதறிய நடிகை..! சின்னத்திரை நடிகையின் தலைமுடியில் பற்றிய தீ!
Dec 19, 2023, 12:42 IST
நடிகை, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நடிகை சவி மிட்டல். இந்தி சீரியல்களில் நடித்துள்ள இவர், பாலிவுட்டிலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஹரீஸா என்ற ஒரு மகள் உண்டு. இவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டார். இந்த நிலையில் நடிப்பு, மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் சவி, தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அந்த வீடியோவில், அவர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது திடீரென முடியில் தீப்பற்றி இருக்கிறது. இதுபற்றி அவர் தனது பகிர்வில், ’நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது இது நடந்திருக்கிறது. இதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். எதேச்சையாக இது கேமராவிலும் பதிவாகி இருக்கிறது. இது நடக்கும்போது என்னை காப்பாற்றிய சக நடிகர் கரணுக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.