கிடைத்த பெரிய வாய்ப்பை தவறவிட்ட ‘விடுதலை‘ பட நடிகை…!
வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள ‘விடுதலை‘ படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். மேலும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தங்கை ஆவார்.
இந்நிலையில் இந்தியாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இவர், இசை குடும்பத்தில் இருந்து வந்த நடிகை பவானி ஸ்ரீயை அழைத்து இந்த படத்தில் ஒரு பாடலை படச் சொல்லி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பவானி ஸ்ரீ நான் இசை குடும்பத்தில் இருந்து வந்தாலும், எனக்கு இசை பற்றி தெரியுது என கூறி பாடலை பாட மறுத்துவிட்டார். இளையராஜா இசையில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைக்காத என நினைக்கும் பலர் உண்டு. ஆனால் அப்படி கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை நடிகை பவானி ஸ்ரீ தவறவிட்டார்.