பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவுக்கு கும்பிட்டு போட்டு அனுப்பிய நடிகை..!

 
ரட்சிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலமுறை பங்கேற்க அழைப்பு விடுத்தும் வேண்டவே வேண்டாம் என்று கூறி கும்பிட்டு போட்டு விடைபெற்றுள்ளாராம் பிரபல நடிகை ஒருவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் தொடர்ந்து தமிழில் சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவரும் பிரபல சீரியல் நடிகராக உள்ளார்.

பல ஆண்டுகளாக சீரியல் உலகில் நடித்து வரும் இவர், தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவருடைய மார்கெட் ஏறுமுகமாகவே உள்ளது.

ஆனால் சில குறிப்பிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேச தெரியாமல் பேசி, மீம்ஸ் கண்டட்டுகளை கொடுத்து இவர் பெயரையும் கெடுத்துக் கொண்டார். இதனால் தன்னுடைய பெயரிலுள்ள கலங்கத்தை துடைக்க தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு அவரை சீசன் 5-யில் போட்டியாளராக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2 சீசன்களிலும் பங்கேற்கவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்துகொண்ட அவர், இனி நடிப்பு மட்டுமே என்று கூறி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டார். இம்முறை பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும்  வேண்டாம் என்று நடிகை ரட்சிதா கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web