நயனை விட அதிக சம்பளம் வாங்க போகும் நடிகை... அதுவும் சிவகார்த்திகேயன் படத்தில்..!  

 
1

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ படத்தில் நடித்த முடித்துவிட்டு ஏஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

சிவகார்த்திகேயன் படத்திற்காக கதை திரைக்கதையை எழுதி முடித்து விட்ட சிபி சக்கரவர்த்தி தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகி ஆக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் நடித்த ’வாரிசு’ படத்தில் நடித்த நிலையில் தனுஷ் நடித்த ’குபேரா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகை பொருத்தவரை நயன்தாரா தான் அதிகமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை விட அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையை சிவகார்த்திகேயன் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web