பொன்னியின் செல்வன் டப்பிங் தொடக்கம்- ரகசியத்தை வெளியிட்ட நடிகை..!

 
மணிரத்னத்துடன் வித்யா சுப்பிரமணியம்

தமிழில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கிவியுள்ளது என்பதை பிரபல நடிகை வெளியிட்ட பதிவில் மூலம் தெரியவந்துள்ளது.

பரத நாட்டியக் கலைஞரான வித்யா சுப்பிரமணியன் முதன்முறையாக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் அவர் வானவன் மாதேவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுந்தரச் சோழராக நடிக்கும் பிரகாஷ் ராஜுக்கு இவர்தான் ஜோடி என்பது தெரியவருகிறது.

படத்தில் வானவன் மாதேவியாக வரும் வித்யா சுப்பிரமணியத்துக்கு டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. இதுகுறித்து தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கான டப்பிங் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இவருக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் ஒரேநாளில் நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிகிறது.
 

From Around the web