பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் ஜி.பி. முத்து..?

 
பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து பங்கேற்பது புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் புதிய சீசனுக்கான படப்பிடிப்பு சென்னைக்கு அருகே தொடங்கியுள்ளது. இம்முறை போட்டியாளர்களாக யாரெல்லாம் பங்கேற்கவுள்ளார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது.

முன்னதாக நடிகை பூனம் பாஜ்வா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்பதை ட்விட்டர் மூலம் உறுதி செய்திருந்தார். அவருடைய பதிவுக்கு பலரும் பாராட்டுக்களை கூறி இருந்தனர். தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்கும் இரண்டாவது போட்டியாளர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து மற்றொரு போட்டியாளராக பிக்பாஸில் பங்கேற்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் செய்யப்படும் இடத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என செய்திகள் வெளியாகி வந்தன. அது தற்போது உறுதியாகியுள்ளது. ஜி.பி. முத்துவை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

From Around the web