உடைந்த உண்மை..! பாக்யராஜின் மகளுக்கு குழந்தை இருக்கிறதா?
பாக்கியராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் காணப்படுகின்றார்கள். இவர் பாரிஜாதம் படத்தில் நடித்தவர் தான் சரண்யா. பாக்கியராஜ் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள் படத்திற்கு பிறகு ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், விடியும் வரை காத்திரு, தூறல் நின்னு போச்சு, இன்று போய் நாளை வா, அந்த ஏழை நாட்கள், முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி, சுந்தரகாண்டம், தாவணி கனவுகள் என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட் அடித்தன.
பாக்கியராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய முதல் மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடிகை பூர்ணிமா ஜெயராம், பாக்யராஜ் படங்களில் நடித்த போது... இவர் முதல் மனைவி மீது வைத்திருந்த அன்பை பார்த்து... காதல் வயப்பட்டார். ஆரம்பத்தில் பூர்ணிமாவை திருமணம் செய்து கொள்ள பாக்யராஜ் மறுத்தாலும், பின்னர் குடும்பத்தினர் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருவரும் 1894-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.பாக்கியராஜின் மகன் சாந்தனு சினிமாவில் அடையாளப்பட்ட நடிகர்களுள் ஒருவராக காணப்படுகின்றார். சரண்யா பாரிஜாதம் படத்தில் மட்டும் தான் நடித்தார்.
சரண்யாவுக்கு 38 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம் அவருடைய காதல் தோல்வி தான் என்று கூறப்பட்டது. அது மட்டுமின்றி காதல் தோல்வியால் மூன்று முறை விபரீத முயற்சியும் எடுத்துள்ளாராம்.
சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியினால் தான் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே பாரிஜாதம் படத்திற்கு பின்னர் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும், மீடியாவில் முகம் காட்டியுள்ளார் சரண்யா. இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றிய பல தகவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் நானும் சாந்தனுவும் ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கின்றோம். அதை எப்போதும் நாங்கள் வெளிக்காட்டியது இல்லை. சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படம் எனக்கு பிடித்திருந்தது.
நான் குழந்தையையும் பார்த்துக் கொண்டு செய்யும் காஸ்டியூம் டிசைன் வேலையும் பார்ப்பது ரொம்பவே கஷ்டமாக உள்ளது. என்னுடைய அம்மா எப்படி சிரமப்பட்டு இருப்பார் என்பதை இப்போதுதான் புரிகின்றது. என்னுடைய குடும்பம் எனக்கு எல்லா வகையிலும் சப்போர்ட்டாக உள்ளது. இதனால் புதிய தாயாக நான் இருந்தாலும் தூங்கும் நேரம் எனக்கான ஸ்பெஷல் ஆகியவை கிடைக்கின்றது என்று கூறியுள்ளார்.
குழந்தையை வைத்துக்கொண்டு வேலை செய்வதால், சில சமயம் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லையே? என கில்டினஸ் தோன்றுமா? என தொகுப்பாளர் கேட்டபோது... அது நான் வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, மூன்றாவது மாடியில் இருந்து நான்காவது ப்ளோருக்கு சென்று என்னுடைய கஸ்டமர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூட அந்த எண்ணம் வரும். சில சமயத்தில் வீட்டில் இருப்பவர்கள் போன் செய்து, குழந்தை அழுவதாக கூறினால் கஸ்டமரிடம் பேசக்கூட முடியாது. தன்னுடைய மைண்ட் முழுக்க குழந்தை அழுவது மேல் தான் இருக்கும். எனவே நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள் ஒரு பத்து நிமிஷம் நான் போயிட்டு வந்து விடுகிறேன் என கூறிவிட்டு குழந்தையை சென்று பார்ப்பேன்.
சரண்யாவின் ஹேண்ட் பேக் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது... என்னிடம் ஹேண்ட் பேக் கிடையாது. பாப்பாவின் டயப்பர் பேக் மட்டும் தான் என் கையில் இப்போதைக்கு உள்ளது. அதில் வேசிலின் மற்றும் தலைவலி தைலம் மட்டுமே என்னுடையது இருக்கும். மற்றபடி பாப்பாவுக்கு தேவையான டிரஸ், பேம்பர்ஸ், பாட்டில்ஸ் போன்றவை தான் அதில் உள்ளது. என ஒரு புதிய தாயின் சந்தோஷங்களை பகிர்ந்துள்ளார்.
அதேபோல் சரண்யாவின் குழந்தை தான் தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சரண்யாவுக்கு எப்போது திருமணமானது? அவருடைய கணவர் யார் என்கிற கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை கிடைக்கவில்லை. ஒரு சிலர் சரண்யா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறாரா? என்கிற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.