என்றும் நினைவில் நிற்கும் கேப்டன்! விஜயகாந்த் கலக்கிய திரைப்படங்கள்!

 
1

விஜயகாந்த் காக்கிச் சட்டையை அணிந்துக் கொண்டு கம்பீரமாக நடித்துள்ளார். அந்த படங்களில் விஜயகாந்த் அதற்காக மெனக்கெட்டவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

டிஎஸ்பி தீனதயாளன் – ஊமை விழிகள்:

இயக்குநர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், அருண் பாண்டியன், சந்திரசேகர் என பலர் நடித்து வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் தான் ஊமை விழிகள். 1986ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் அதிரடி காட்டி நடித்திருப்பார். திரில்லர் திரைப்படமாக அந்த படம் வெளியானது. ஊமை விழிகள் படத்தினை தயாரிப்பாளர் ஆபவனன் தயாரிக்க, இசையமைப்பாளர் மனோஜ் ஞான மற்றும் ஆபவனன் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஜெகநாத் – தர்மம் வெல்லும்:

1989ம் ஆண்டு இயக்குநர் கே ரங்கராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், சுஜாதா, கெளதமி என பலர் நடித்த திரைப்படம் தான் தர்மம் வெல்லும். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் எஸ் மது தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் மற்றும் விஜய் என இரு கதாபாத்திரங்களில் டபுள் ஆக்‌ஷன் ரோலில் விஜயகாந்த் நடித்திருந்தார்.

ஏசிபி பன்னீர் செல்வம் – சத்ரியன்:

மாநகர காவல் வெளியான அதே ஆண்டில் சத்ரியன் படத்தில் ஏசிபி பன்னீர் செல்வமாக நடித்து மிரட்டியிருந்தார் கேப்டன் விஜயகாந்த். அந்த படத்தில் அவருடைய காஸ்ட்யூம், லுக் எல்லாமே பல போலீஸாருக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக மாறியது. கே. சுபாஷ் இயக்கத்தில் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட படம் சத்ரியன். பானுப்ரியா ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ தெறி படத்தை இந்த படத்தை இன்ஸ்பயர் செய்து தான் எடுத்து இருந்தார் என விமர்சிக்கப்பட்டது.

ஏசிபி சுபாஷ் – மாநகர காவல்:

இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், சுமா, நம்பியார் என பலர் நடித்த அதிரடி – திரில்லர் திரைப்படம் மாநகர காவல் 1991ம் ஆண்டு வெளியானது. இப்படத்தினை தயாரிப்பாளர் எம் சரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஏசிபி சுபாஷ் ஆக காக்கிச் சட்டை அணிந்து செம கெத்தாக நடித்திருப்பார் விஜயகாந்த்.

பிரபாகரன் IFS – கேப்டன் பிரபாகரன்:

1991ம் ஆண்டு இயக்குநர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் என பலர் இணைந்து நடித்த மெகா ஹிட் திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். இப்படத்தினை தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் DFO பிராபகரன் IFS கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஹானஸ்ட் ராஜ், சேதுபதி ஐபிஎஸ், தாய்மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த விஜயகாந்துக்கு வல்லரசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. லெஃப்ட் லெக்கில் சுழற்றி சுழற்றி அடிக்கும் சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டினார். கடைசியாக அரசாங்கம் படத்தில் போலீஸ் அறிவரசு IPS ஆக காக்கிச்சட்டை அணிந்து கலக்கி இருப்பார் விஜயகாந்த். இன்று கருப்பு கண்ணாடி அணிந்துக் கொண்டு கண்ணாடி பெட்டியில் அமைதியாகி விட்டார்.

From Around the web