அள்ளிக்கொடுக்கும் கேப்டனின் குணம்! இயக்குனர் அமீர் கூறிய நெகிழ்ச்சி சம்பவம்!

 
1

விஜயகாந்தின் தங்கமான குணம் குறித்து இயக்குநர் அமீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மரணம் என்பது இயற்கையான ஒன்று தான் தவிக்க முடியாது. பல மரணம் நமக்கு செய்தி, சில மரணங்கள் ஏன் நிகழ்ந்தது என்று நம்மை வருத்தப்படவைக்கும் அப்படி, எந்தவிதமான ரத்த சொந்தமும் இல்லாதவர்களின் மரணம் ஏன் நடந்தது என்று மனம் கேட்டுக்கொண்டே இருக்கும் அப்படி ஒரு மரணம் தான் விஜயகாந்த் இறந்தது. அவர் உடல்நலக்குறைவுடன் இருக்கிறார், என்றாவது ஒரு நாள் நம்மைவிட்டு சென்று விடுவார் என்று அறிவுக்கு தெரிந்தாலும், மனம் அந்த செய்தியை ஏற்க மறுக்கிறது.

என் மைந்தர் என்பதால் மதுரையில் அவரை தூரத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். அதன் பிறகு,என் முதல் படமான மௌனம் பேசியதே படம் வெளியான போது அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கொடுத்தது. அதன்பின் நான் ஒருமுறை வீட்டுக்கு சென்றேன் அப்போது வீட்டு பணி ஆட்கள் காபி கொண்டுவந்தார்கள். அவர்களை திருப்பி அனுப்பிவிட்டு போய் பிரேமாவை காபி கொண்டுவர சொல் என்றார் அதைப்பார்த்த நான் வியந்துவிட்டேன் அந்த சம்பவத்தை நான் என்றும் மறக்கவே மாட்டேன். அதேபோல விஜயகாந்தின் அரசியல் வருகை குறித்து முதன் முதலில் நான் தான் பேட்டி அளித்தேன். அதில் விஜயகாந்த் அரசியலுக்கு வருவார், அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவார் என்று சொன்னேன். அன்று நான் கவனிக்கப்படாத நபராக இருந்ததால், இதையாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதே போல தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பிரச்சனை நடந்தது. அதில், ஏதோ ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அது பல ஆண்டுகளாக செயல்படாததால், பணம் கொடுத்த தயாரிப்பாளர் பணத்தை கேட்டு வந்தார். அப்போது, விஜயகாந்த் பணம் கொடுத்த தயாரிப்பாளர் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறார். அவர் பணம் நமக்கு எதுக்கு, தயாரிப்பாளர் சங்கம் பணத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். அது எப்படி தரமுடியும் என்று வாக்குவாதம் ஏற்பட, கடைசியில் விஜயகாந்த், 50 லட்சம் ரூபாய் தானே நான் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் என்று இயக்குநர் அமீர் விஜயகாந்த் பற்றி பேசினார்.

From Around the web