துருவங்கள் பதினாறு பட இயக்குனரின் அடுத்த படத்தின் சென்சார் தகவல் வெளியானது..! 

 
1

கார்த்திக் நரேனின் கார்த்திக் நரேனின்  ’துருவங்கள் பதினாறு’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது அனைவரும் தெரிந்ததே.இதனை அடுத்து அருண் விஜய் நடித்த ’மாபியா’, தனுஷ் நடித்த ’மாறன்’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி நடித்த ’நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் இந்த படம் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதர்வா நடிப்பில் உருவான ’நிறங்கள் மூன்று’ என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கி முடித்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர். அதர்வா, நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சரத்குமார், ரகுமான் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


From Around the web