ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே வெடித்த மோதல்- பரபரப்பான ப்ரோமோ

 
ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா விஜயகுமார்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்த வரிசையில் புதியதாக துவங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியும் இணைந்துள்ளது. இதுவரை பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து மட்டும் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டு வருகிறது.

இதில் போட்டியாளராக இருந்து வந்த வனிதா விஜயகுமார் நிகழ்ச்சி தயாரிப்புடன் ஏற்பட்ட பிரச்னையாக காரணமாக நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள்கள் வெளியாகின. சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை வனிதா உறுதியும் செய்தார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே கருத்து மோதல் ஏற்படுகிறது. இருவரும் படப்பிடிப்பின் போது நேரடியாக மோதிக்கொண்டது போல தெரிகிறது.

என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று வனிதா சொல்கிறார். அதனால் ஆவேசமடையும் ரம்யா கிருஷ்ணன், போட்டியாளர்களிடையே எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும் என்று கத்துகிறார். அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறுகிறார். 

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ வெளியானதை அடுத்து, இந்த வார நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

From Around the web