லியோ படக்குழு வெளியிட்ட க்ளிம்பஸ் விடியோ..! ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
1

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leo

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இறுதிகட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்திலிருந்து ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘நான் ரெடி’ பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாகவும், யூடியூபில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web