தளபதியின் பக்கா பிளான்..முதல் மாநாட்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு..! 

 
1
 ’கோட்’ திரைப்படத்தை முடித்து விட்ட விஜய் அடுத்ததாக ’தளபதி 69’ படத்தில் நடிக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும், தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் முழுமையாக கூட இல்லாத நிலையில் ஒரு வருடம் ஒரு திரைப்படத்திற்காக வேஸ்ட் செய்ய வேண்டாம் என்று அவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த அவர் முடிவு செய்திருப்பதாகவும் முதல் மாநாடு மதுரை அல்லது கோவையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இந்த இரண்டு நகரங்களிலும் முடியாத பட்சத்தில் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த மாநாடு நடந்த இடத்தில் தான் தவெக மாநாடு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் பத்து லட்சம் பேரை மாநாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த மாநாட்டுக்கு மட்டுமே விஜய் 10 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

From Around the web