நீதிமன்றம் அதிரடி..! சர்ச்சையில் சிக்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..! 

 
1

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ராமசரவணன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

அரசியல் மற்றும் திரைப்பட உலகம் இந்த வழக்கை மிகுந்த கவனத்துடன் தொடர்கிறது. தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர், இந்த வழக்கை விரைவில்  தீர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாது ரசிகர்கள் மத்தியில் ஏஞ்சல் படம் திரைக்கு வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

From Around the web