விபத்தில் சிக்கிய படக்குழு – ‘கடவுளுக்கு நன்றி‘ சொன்ன விஷால்!

 
1

சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த படம் ‘லத்தி‘. இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தற்போது விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய முன்தினம் இரவு (பிப்ரவரி 21) ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது. அப்போது அங்கு 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர். நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நல்ல வேளையாக அனைவரும் உயிர் தப்பினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி நிற்கவில்லை என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதைப்பற்றி விஷால் வெளியிட்டுள்ள பதிவில், ‘மார்க் ஆண்டனி‘ படப்பிடிப்பில் சில வினாடிகளில் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளேன். ‘கடவுளுக்கு நன்றி‘ என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


 

From Around the web