விஜய் டி.வி-க்கு தொடரும் நெருக்கடி- பிரபல சீரியலில் இருந்து விலகிய பிரபலம்..!

 
ரச்சிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் நடித்து வரும் நடிகை, அந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் பலரும் பிரபலமாகி வருகின்றனர். சிறியளவில் பிரபலமானால் போதும், உடனடியாக அவர்கள் நடித்து வரும் தொடர் அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது தொடர்ந்து வருகிறது.

அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியலின் கதாநாயகி ரோஷிணி அந்த தொடரில் இருந்து விலகினார். அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவ்யா, காற்றுக்கென்ன வேலி சீரியலில் தர்ஷன் ஆகிய முக்கிய நடிகர்களும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்த வரிசையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரச்சிதா, அந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், மகாவிடம் இருந்து விடைபெறுவதாக ஸ்டோரி வைத்துள்ளார். தொடர்ந்து ஏன் விஜய் டிவி பிரபலங்கள் அந்த சீரியலில் இருந்து வெளியேறி வருகின்றனர் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 
 

From Around the web