மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பிரபுவின் தற்போதைய நிலை  ? 

 
1

பிரபல நடிகர் பிரபு.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பிரபு, தற்போதும் திரைப்படங்களில் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.  66 வயதாகும் அவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த திங்கள்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

 சிறுநீரக பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு மருத்துவமனையில் நடந்த  பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.   இதை அடுத்து நேற்று காலையில் யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்பட்டிருக்கிறது.

 அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரபு முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   இன்னும் ஓரிரு நாளில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

1

From Around the web