பிரபல இயக்குனர் ரவீந்தரின் தற்போதைய நிலை..! திடீர்னு என்னாச்சு அவருக்கு...
சீரியல் நடிகை மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 'அரசி' சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கிய இவர், இதை தொடர்ந்துஅடுத்தடுத்து பல சீரியல்களில், வில்லி முதல் எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை உள்வாங்கி கொண்டு நடிக்கும் அளவிற்கு திறமையானவர் என பெயர் எடுத்தவர்.
நடிகை மஹாலட்சுமி சுனில் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்ற நிலையில், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை மஹாலட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார்.இது தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிபிடத்தக்கது. தமிழசினிமாவில் ஒரு சில படங்களை தயாரித்தது மட்டுமின்றி படத்தை விநியோகம் செய்வதையும் செய்து வந்தார். இவர்கள் திருமணம் பிரமாண்டமாக நடந்து வந்தாலும் மகாலட்சுமி ரவீந்தரை காசுக்காக தான் திருமணம் செய்து கொண்டார் என பேசப்பட்டது. இவர்கள்கது திருமண வாழ்கை நன்றாக சென்று கொண்டு இருக்கையில் புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் ஒரு பட விவகாரத்தில் பண மோசடி செய்து விட்டார் என்று அவர் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தார். தற்போது உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நுரையீரல் பிரச்சனையினால் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென்று வீடியோ ஒன்று வெளியிட்டார்.
அதாவது ரவீந்தர் தனக்கு கடந்த வாரத்தில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மூச்சு விடுவதற்கு கஷ்டமாக இருந்ததாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கு ஒரு வாரமாக தான் ISUவில் இருந்ததாகவும் வெண்டிலேட்டர் உதவியோடு தான் தன்னால் சுவாசிக்கவே முடிந்தது என்றும் கூறியிருக்கிறார். அதோடு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருக்கும் போது அவர் வழக்கம் போல தன்னுடைய பிக் பாஸ் ரியூவை தொடங்கி இருக்கிறார். ஆனால் மூக்கில் அவரால் இயல்பாக மூச்சுவிட முடியாமல் இருக்கும் நிலையில் டியூப் மூலமாகத்தான் மூச்சு விட முடிகிறது. இந்த நிலையிலும் பிரபல சேனல் ஒன்றில் அவர் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில், தனக்கு நுரையீரலில் சில இன்ஃபெக்ஷனாகி இருப்பதாகவும் நெஞ்சு பகுதியில் அதிக வலி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், ஆக்ஸிசன் அளவு குறைவாக இருப்பதால், மூச்சு சுவாசம் செய்யும் சிகிச்சைக்காக முகத்தில் இந்த டியூப் போட்டுள்ளதாகவும் ரவீந்தர் தெரிவித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் குணம்பெற ஆறுதல் கூறி வருகிறார்கள்.