பிக்பாஸ் சீசன் 5-யில் பிரபல நடிகையின் மகள்- புதிய வரலாறு உருவாகும் நிதர்சனம்..!

 
கமல்ஹாசன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல நடிகையின் வளர்ப்பு மகள் போட்டியாளராக பங்கேற்கும் விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

தமிழக தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். சமகால அரசியலை மறைமுக சாடுவது, தன்னுடைய கலைப் பயணம் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிடுவது என கமல்ஹாசனின் பாங்கு பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் புதிய பிக்பாஸ் சீசன் விரைவில் துவங்கப்படுகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் புதிய சீசனுக்குரிய போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் நிகழ்ச்சிக் குழு ஈடுபட்டுள்ளது.

அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 5-யில் பிரபல நடிகையின் மகள் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிகை ஷகீலாவின் மகளும், திருநங்கையுமான மிலா என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக பங்கேற்கும் திருநங்கை என்கிற வரலாற்றை படைப்பார் மிலா. எதிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம், பாலியல் சிறுபான்மையினருக்கான முன்னேற்ற பணிகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளது.

திருநங்கை மிலா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம், அவர் சார்ந்துள்ள சமூகத்திற்கு பெரிய நன்மை கிடைக்கும் என்று உறுதி. இதற்கு கமல்ஹாசனும் சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web