கதாநாயகியாக கால்பதிக்கும் முன்னாள் கதாநாயகியின் மகள்..!

 
நடிகை ஸ்ரீகாந்த் மற்றும் சிவரஞ்சினி

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த பிரபல கதாநாயகியின் மகள் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் 90-களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் சிவரஞ்சினி. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் கமல்ஹாச்ன, சத்யராஜ், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு சினிமாவில் நடித்த போது, சக நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து 1997-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டர். தற்போது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் வசிக்கிறார்.

தெலுங்கில் ஊஹா என்கிற பெயரில் இவர் படங்களில் நடித்து வந்தார். திருமணத்தை தொடர்ந்து நடிப்பை தொடரவில்லை. எனினும் கணவருடன் சேர்ந்த திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, டிவி நேர்காணலில் இடம்பெறுவது என இன்னும் கொஞ்சம் பிரபலமாக உள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் - சிவரஞ்சினியின் மகள் மேதா கதாநாயகியாக நடிக்கிறார். ஆனால் அவர் இன்னும் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. நல்ல கதை மற்றும் இயக்குநர்களை தேடும் பணியில் சிவரஞ்சினி மற்றும் ஸ்ரீகாந்த் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே ருத்ரம்மாதேவி படத்தில் மேதா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதனால் மீண்டும் அதே இயக்குநர் இயக்கும் படத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web