அதிதியை தொடர்ந்து கதாநாயகியாகும் பிரபல இயக்குநரின் மகள்..!

 
சரஸ்வதி மேனன்
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியை தொடர்ந்து மற்றொரு பிரபல இயக்குநருடைய மகளும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் இளைய மகளாவார். இந்த படத்தை நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர். அதேபோல சினிமாவில் கால்பதிக்கும் அதிதி ஷங்கருக்கும் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.

இந்த வரிசையில் மற்றொரு இயக்குநரின் மகளும் சினிமாவில் அறிமுகமாகிறார். தரமணி பட நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே தந்தை இயக்கத்தில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். வசந்த் ரவி மற்றும் சரஸ்வதி நடிக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web