சினிமாவில் அறிமுகமாகும் பிரபல டாக்டர் நடிகரின் மகள்..!
 

 
நடிகை ஜீவிதா மற்றும் மகள் சிவாத்மிகா

தமிழ் சினிமவில் அடுத்ததாக பிரபல நடிகரின் இளைய மகள் சினிமாவில் கால்பதிக்கவுள்ளார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிப் படங்களில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் இருக்கும் அளவுக்கு வாரிசு நடிகைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. எனினும், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்,கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா அர்ஜுன் என பட்டியல் கொஞ்சம் பெரிதாகவே உள்ளது.

ஆனால் இவர்களில் வெற்றிநடை போடும் நடிகைகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகிய இருவரும் மட்டுமே உள்ளனர். இந்த வரிசையில் 1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகாவும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். 

அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடிக்கிறார். இவருடைய அறிமுகம் தமிழ் சினிமாவில் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web