டைரக்டர் இப்படி கதை எடுத்து செல்வது புடிக்கல - கடுப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள்..!

 
1

சிறகடிக்க ஆசை சீரியலில் இதுவரை குடிகாரனாகவும் பொறுக்கி தனமாகவும் சுற்றித்திரிந்த முத்து, மீனாவை திருமணம் செய்து கொண்ட பின்பு பொறுப்புள்ள நபராக மாறினார். இதனை தமது முதலாம் ஆண்டு திருமண நிகழ்வின் போது கூறி இருந்தார். இதன் போது விஜயாவும் மீனாவை பற்றி பெருமையாக பேசி இருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே முத்து மீனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வகையில் மனோஜ், ரோகினிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி வருகின்றார் டைரக்டர். இதன் காரணமாக இந்த சீரியலில் முதலாவது ஹீரோ ஹீரோயின், மனோஜ் ரோகிணியும் தான். இரண்டாவது ஸ்ருதியும் ரவியும். இறுதியில் ஒன்றுக்குமே ஆகாத ஊறுகாய் மாங்காயாக முத்துவும் மீனாவும் உள்ளார்கள் என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வந்தார்கள்.

தற்போது இந்த சீரியலில் மனோஜ் பெரிய கடை ஒன்றுக்கு ஓனராக அமருகிறார். ஆனால் அது அண்ணாமலையின் காசு என்றும் ஜீவா கொடுத்த காசு என்றும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த விஷயம் யாருக்கும் தெரிய வருமா என்றும் தெரியவில்லை. இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From Around the web