பட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் கொள்ளையனாக மாறிய இயக்குநர்..!!

 
1

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பதற்றம் அடைந்த விஜயலட்சுமி செயின் பறிப்பு சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

chain theft

மேலும் மர்ம நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில், விஜய்பாபு என்பவர் செயின்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

சினிமாவில் துணை இயக்குநராக இருக்கும் விஜய்பாபு, புதிய திரைப்படங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். மேலும் கையில் பணமும் இல்லாமல் அவதிப்பட்டுவந்துள்ளார்.

இதையடுத்து இரவில் தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

From Around the web