சென்னையை கதைகளமாக வைத்து களமிறங்கும் தி ஃபேமிலி மேன் சீசன் 2..!

 
சென்னையை கதைகளமாக வைத்து களமிறங்கும் தி ஃபேமிலி மேன் சீசன் 2..!

இந்தியாவிலுள்ள பல்வேறு ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாவது சீசனுக்கான டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 1 வலை தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உருவானது. இந்திய கதையமைப்பில் சர்வதேச தரத்தில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து கூறினர்.

மேலும் இந்த தொடரில் கதாநாயகனாக நடித்த மனோஜ் பாஜ்பாய் மற்றும் கதாநாயகி ப்ரியாமணி ஆகியோருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

தென்னிந்தியாவிலும் இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 1 தமிழகத்தின் சில முக்கிய அம்சங்களை வைத்து உருவாக்கப்பட்டது. இதற்கான இரண்டாவது சீசனில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து புதிய சீசன் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. கடந்தாண்டே இதனுடைய இரண்டாவது சீசன் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் வெளியாகவில்லை. தற்போது புதிய சீசனுக்கான டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி புதிய சீசன் சென்னையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் சமந்தா தமிழ் பேசும் போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தி ஃபேமிலி மேன் சீசன் 2 டிரெய்லர் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

From Around the web