’தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
 

 
’தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இந்தியாவில் உருவாக்கப்பட்டு சர்வதேசளவில் கவனமீர்த்த ’தி ஃபேமிலி மேன்’ வலை தொடரின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் சாதாரணமாக வெளியிடப்பட்ட தொடர் தான் ’தி ஃபேமிலி மேன்’. ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இருவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த தொடர் சர்வதேசளவில் கவனமீர்த்தது. 

மிகவும் பரபரப்பாகவும், இந்தியா படைப்புகளுக்கே உரிய எதார்த்த தன்மையுடனும் உருவாக்கப்பட்ட இந்த தொடர் வெளிநாட்டு ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்பட்டது. முதல் சீசன் மிகவும் பரபரப்பான கட்டத்தில் நிறைவடைந்தது. அதனால் இதனுடைய இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தென்னிந்தியளவிலும் கவனமீர்க்கும் பொருட்டு இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா அக்கினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக இதனுடைய டீசர் வெளியாகி சமந்தாவின் தோற்றம் வெளியிடப்பட்டது. அதன்படி புதிய சீசனில் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் பல ரசிகர்களின் காத்திருப்புக்கு பலனிக்கும் விதமாக ’தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தொடர் வரும் ஜூன் 11- ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்தியில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.

From Around the web