’தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 டிரெய்லர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!

 

வலை தொடர் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் சீசன் 2-வுக்கான டிரெய்லர் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளிப்பரப்பான ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 1 ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்திய பாணியில் சர்வதேச தரத்தில் இந்த  வலை தொடர் தயாரிக்கப்பட்டு இருந்தது. மொழிகளை கடந்து பல்வேறு ரசிகர்களும் இந்த தொடரை கொண்டாடினர்.

சீசன் 1-க்கு கிடைத்த வரவேற்பை உணர்ந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம் இரண்டாவது சீசனுக்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்தது. அதன்படி புதிய சீசனில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா இந்த தொடருக்குள் கொண்டுவரப்பட்டார்.

மிகவும் மிரட்டலான எதிர்மறை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த சீசன் 2-க்கான டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வலை தொடரின் படப்பிடிப்பு பணிகள் அனைத்து முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி வரும் ஜூன் முதல் வாரத்தில் ‘ஃபேமிலி மேன் சீசன் 2 வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக நாளை இந்த சீரியலின் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியாகிறது. இதனால் ‘தி ஃபேமிலி மேன்’ தொடரை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

From Around the web