தி ஃபேமிலி மேன் சிரீஸ் தமிழர்களுக்கு எதிரானது அல்ல- இயக்குநர்கள் விளக்கம்..!

 
தி ஃபேமிலி மேன் சிரீஸ் இயக்குநர்கள்

இந்தியில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 வலை தொடர் தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்படவில்லை என்று தொடரின் இயக்குநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் ‘ தி ஃபேமிலி மேன்’ சீசன் 1 ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் புதிய சீசனின் தமிழ் மற்றும் தெலுங்குப் பட நடிகையான சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சமந்தாவின் முதல் டிஜிட்டல் அறிமுகம் என்பதால் தென்னிந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

கடந்த வாரம் தி ஃபேமிலி மேன் சீசன் 2 தொடரின் டிரெய்லர் வெளியானது. இதில் தமிழர்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதிப்பளிக்காத காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

தற்போது இதுதொடர்பாக தொடரின் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே  விளக்கம் அளித்துள்ளனர். அதில், இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தொடராகும். இரண்டாவது சீசனில் பல தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மிகவும் தைரியமான ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

டிரெய்லர் காட்சிகளை பார்த்துவிட்டு எதையும் யூகிக்க வேண்டாம். சீசன் 2 உருவாக்கப்படும் போது எங்களுடன் பணியாற்றி பலரும் தமிழர்கள். அப்படியிருக்க நாங்கள் எப்படி தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

From Around the web