இந்தி ‘சேது’ படத்தை இயக்கிய பிரபல நடிகர், இயக்குநர் திடீர் மரணம்..!!

நடிகர் சதீஷ் கவுசிக் ஏப்ரல் 13, 1956ஆம் ஆண்டு அரியானாவில் பிறந்தார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1987ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானார். இந்த நிலையில் நடிகர் சதீஷ் கவுசிக் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் அனுபம் கேர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மரணமே இந்த உலகத்தின் இறுதி உண்மை என்று எனக்குத் தெரியும்! நீ இல்லாமல் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்! ஓம் சாந்தி!, என்று தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc
— Anupam Kher (@AnupamPKher) March 8, 2023