அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரபல நடிகர்!
Sep 12, 2024, 06:35 IST
சேலத்தில் இருந்து சென்னைக்கு தன் குடும்பத்தினருடன் நடிகர் ஜீவா காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கே பைக் ஒன்று வந்தது. இதனால் நிலை தடுமாறிய கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக் குள்ளானது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இச்சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.