பிக்பாஸ் முகென் நடிக்கும் புதிய படம்- போஸ்டரை ரிலீஸ் செய்த பிரபல நடிகர்..!

 
பிக்பாஸ் முகென் நடிக்கும் புதிய படம்- போஸ்டரை ரிலீஸ் செய்த பிரபல நடிகர்..!

பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பலருக்கும் பிடித்த ஒரு சீசன் என்றால் அது மூன்றாவது சீசன் தான். வனிதாவின் அதிரடி கேமிங், சேரனின் செண்டிமெண்ட், அபிராமியின் மாறுபட்ட குணநலன், லாஸ்லியாவின் அப்பாவி தனம், கவின் மற்றும் சாண்டியின் ஸ்டார்ட்டஜி என மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.

பல்வேறு கட்ட திருப்பங்களுக்கு பிறகு அந்த சீசனில் மிகவும் அமைதியாக இருந்த முகென் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருடைய வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இறுதியில் அந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து முகென் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க அடுத்தடுத்து கமிட்டானார்.

இந்நிலையில் கவின் என்பவர் இயக்கும் புதிய படத்தில் முகென் ஹீரோவாக ஒப்பந்தமானார். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் சார்பாக கலைமகன் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார், கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்துக்கு ‘வேலன்’ என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்த படத்தின் போஸ்டரை முகென் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 
 

From Around the web