திடீரென கவர்ச்சியை விட்டு விலகிய பிரபல நடிகை…!

 
1

தமிழ் திரையுலகில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரு கவர்ச்சிகரமான நடிகையாகவே வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. அதேசமயம் மலையாளத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ராய் லட்சுமி, அங்குள்ள முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக தலா 5 படங்களில் நடித்துள்ளார் என்பதே மிகப்பெரிய சாதனை தான்.

சமீபத்தில் கைதி ரீமேக்காக ஹிந்தியில் வெளியான ‘போலா‘ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் ராய் லட்சுமி. இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு தற்காலிகமாக குட்பை சொல்லிவிட்டு மலையாளத்தில் ‘டிஎன்ஏ‘ என்கிற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்காக அவர் பெரிய அளவில் மேக்கப் எதுவும் போட்டுக் கொள்ளாமலேயே நடிக்கிறார் என்பது தான் ஆச்சரியமான விஷயம். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் அதற்கான உடல் மொழியை கொண்டு வருவதற்காக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தை டி.எஸ்.சுரேஷ்பாபு என்பவர் இயக்குகிறார். மேலும் இப்படம் ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி வருகிறது.

From Around the web