பயில்வான் ரங்கநாதனை பங்கமாக கலாய்த்த பிரபல இயக்குனர்..! 

 
1

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது ‘கஸ்டடி’ படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.  இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். ‘கஸ்டடி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக வெங்கட் பிரபு பல வித்தியாசமான காமெடியான கான்செப்ட்களை நிகழ்த்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பயில்வான் ரங்கநாதனை வெங்கட் பிரபு கலாய்த்துள்ளார். பயில்வான் கையில் இரு ஆஸ்கர் விருதுகளை வைத்திருக்கும் எடிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் “பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் “இசை வெள்ளம்” பயில்வான் ரங்கநாதன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நம் அனைவர்க்கும் பெருமையான தருணம், உங்கள் பணியின் பெரிய ரசிகன் சார். மேலும் விவரங்களுக்கு, நாளை மாலை 5 மணிக்கு ஜிவி பிரகாஷின் ட்விட்டர் பக்கத்தை பார்க்கவும்” என்று தெரிவித்துள்ளார்.


 


 

From Around the web