பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய பிரபல வில்லன் நடிகர்..!! 

 
1

தமிழ் சினிமாவில் வில்லனாக நடிப்பவர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்‘ படத்தில் வீரபத்ரனாக மிரட்டியிருப்பார்.  இவரது வில்லத்தனங்கள் இன்றுவரை ரசிக்கக்கூடியவை. இவர் சினிமா வளர்ச்சி காரணமாக நகைச்சுவை வில்லனாக மாறிவிட்டார். இவரை திரையில் பார்த்து பயந்தவர்கள் எல்லாம் தற்போது காமெடியனாக பார்த்து ரசிக்கின்றனர். இவர் சினிமா தவிர்த்து நிஜ வாழ்வில் தன்மையான மனதுக்காரர். கொரோனா தடுப்பூசி குறித்து இவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ‘ படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மன்சூர் அலிகான் நேற்று (பிப்ரவரி.21)  தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் நடித்து வரும் ‘சரக்கு‘ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடி உள்ளார். எப்போதும் வித்தியாசமாகவும், வியப்பாகவும் நடந்துகொள்ளும் மன்சூர் அலிகான் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ‘லியோ‘ படத்தையடுத்து மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்து வரும் படம் ‘சரக்கு‘. இந்த படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக வலினா நடிக்கிறார். மேலும் இப்படத்தை ஜே.ஜெயக்குமார் இயக்குகிறார். இயற்கை விவசாயம் குறித்து அடிக்கடி பேசிவரும் நடிகர் மன்சூர் அலிகான் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

From Around the web