ரசிகர்கள் குஷி..! நாளை தொடங்குகிறது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்..!

 
1

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி அதாவது நாளை மறுநாள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே நீண்ட எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும் வகையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அஜித் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும் அதன் பிறகு சென்னை திரும்பவும் படக்குழுவினர் மீண்டும் துபாய் சென்று பாலைவனத்தில் ஒரு அதிரடி ஸ்டாண்ட் காட்சியை படமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வட இந்தியாவில் உள்ள முக்கிய பகுதிகளில் சில காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் த்ரிஷா நாயகி ஆக நடிக்க இருப்பதாகவும், சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிகை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

From Around the web