விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்திற்கு நாள் குறித்த படக்குழு..!

 
தளபதி 65 படக்குழு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கை தொடர்ந்து, தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பிரச்னையால் பல்வேறு படங்களுடன் தளபதி 65 படத்திற்கான பணிகளும் பாதிக்கப்பட்டன.

கொரோனா பிரச்னை தொடங்குவதற்கு முன்னதாக தளபதி 65 படத்திற்கு வேண்டி பெரியளவிலான வணிகவளாகம் செட் போடப்பட்டது. அதை தொடர்ந்து நிலைமை கையைமீறி போக படப்பிடிப்பு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தளபதி 65 திரைப்படம் 2022-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

கோலாமாவு கோகிலா மூலம் சினிமாவில் அறிமுகமான நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தேசிய விருது வென்ற அன்பறிவு சகோதரர்கள் ஸ்டெண்ட் காட்சிகளை அமைக்கின்றனர்.

இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை அபர்ணா தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்கும் இவர் தான் இசையமைத்தார்.

இந்த படம் முடிந்தவுடன் நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே உருவாக தொடங்கிவிட்டது. தளபதி 66 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

From Around the web