அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு- தேதி குறித்த படக்குழு..!

 
அண்ணாத்த படம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவின் துவங்கப்படவுள்ளது. அதற்கான தேதி தற்போது குறிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதி பாபு என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கொரோனா காலக்கட்டத்துக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த படப்பிடிப்பு பணிகள் ஊரடங்கு அறிவிப்பால் தடைப்பட்டன. இரண்டாவது அலை ஊரடங்குக்கு பிறகு சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.

இந்நிலையில் சென்னை, மேற்கு வங்கம், கடந்த வாரம் லக்னோ என பல்வேறு பகுதிகளில் இதனுடைய ஷூட்டிங் நடந்தது. தற்போது வரும் 21-ம் தேதி அண்ணாத்த படக்குழு மீண்டும் கொல்கத்தா செல்கிறது. அங்குஅ சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

அத்துடன் இந்த படத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடையவுள்ளது. ஏற்கனவே அண்ணாத்த படம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web