அதிர்ச்சியில் திரையுலகினர்! பிரபல சீரியல் நடிகை கோர விபத்தில் பலி..!
கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் தெலுங்கு மொழியில் 'திரினயானி' என்ற தொடரில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்தார். நேற்று அதிகாலை நடிகை பவித்ரா ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் காரில் கர்நாடகாவின் மண்டியா பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதியது.
அதோடு ஐதராபாத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று காரின் வலது புறத்தில் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பவித்ராவின் உறவினர். டிரைவர். சக நடிகர் ஆகியோர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.