பார்த்திபன் இயக்கும் படத்தின் ஏ.ஆர். ரஹ்மான்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
பார்த்திபன் இயக்கும் படத்தின் ஏ.ஆர். ரஹ்மான்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஒத்த செருப்பு படத்தைப் போலவே நடிகர் பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதை அவரே உறுதி செய்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆர். பார்த்திபன் இயக்கி , அவர் மட்டுமே நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்கிற படம் வெளியானது. விமர்சகர்கள் வட்டத்தில் சிறப்பான வரவேற்பை குவித்த இந்த படத்திற்கு மத்திய அரசு இரண்டு தேசிய விருதுகளை அறிவித்தது.

அதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் இரவில் நிழல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்படவுள்ளது. மேலும் அவரே நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்பது குறித்து தகவல் இல்லை.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அப்போது பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்திற்கு இசையமைக்கும் தகவலை அவர் அங்கே உறுதி செய்தார்.


இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது” என்கிற திருக்குறளில் ஏ.ஆர். ரஹ்மானை மாற்றி பதிவு செய்துள்ளார்.

தற்போது இரவின் நிழல் படத்துக்கு 3 பாடல்கள் தயாராகியுள்ளன. மிகவும் புதுமையான அனுபவத்துடன் இந்த படத்தை உருவாக்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
 

From Around the web