இயல்புக்கு மாறான விஷயத்தை இந்த படத்தில் சொல்லி உள்ளார்கள்.. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை - பயில்வான் ரங்கநாதன்..!

Gem Cinemeas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், காதல் என்பது பொதுவுடைமை படத்தின் விமர்சனம் பற்றி பேசியிருக்கிறார். ரோகிணி, வினித், லிஜோமோல் ஜோஸ், அனுஷா பிரபு, கலேஷ் ராமா நடிப்பில் உருவான இந்த படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார.
இந்த படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், இது புரட்சிகரமான புதுமையான திரைப்படம். ஆனால், இது தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான படம்...பிரிந்து வாழும் வினித், ரோகிணி தம்பதியரின் மகள் லிஜோமோல்.. மிகவும் துறுதுறுப்பான பெண்.. ஒருநாள் மிகவும் தயங்கி தயங்கி, தான் ஒருவரை காதலிப்பதாக, தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார்.
இதைக்கேட்ட ரோகிணி, இதிலென்ன இருக்கு? உன் வயசில் எல்லாருமே காதலிப்பார்கள்.. நீ காதலிப்பது யாரை? ஒருநாள் அவரை வீட்டுக்கு அழைத்து வா" என்கிறார்.. உடனே மகளும், அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார். ஆணும், ஒரு பெண்ணும் வீட்டுக்கு வருகிறார்கள்.. மருமகனை நேரில் பார்த்ததுமே, ரோகிணி விழுந்து விழுந்து உபசரிக்கிறார்.. அப்போதுதான், "தான் காதலிப்பது அந்த ஆணை அல்ல, அவருடன் வந்துள்ள பெண்ணை என்று" ரோகிணியின் மனதில் இடியாய் அந்த விஷயத்தை சொல்கிறார் மகள்.
அந்த பெண்ணைதான், திருமணம் செய்து கொள்ள போவதாகவும் மகள் சொல்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரோகிணி, உடனே பிரிந்து வாழும் தன்னுடைய கணவர் வினித்திடம், இந்த விஷயத்தை கொண்டு போகிறார்.. இதையடுத்து வினித், அந்த 2 பெண்களிடமும் கேள்வி கேட்கிறார், "நீங்கள் இருவரும் காதலிப்பது சரி, ஆனால் எங்களுக்கு ஒரு வாரிசு வேணுமே? என்று கேட்கிறார்.
அதற்கு மகள், காமராஜர், அப்துல் கலாம், இவர்களுக்கெல்லாம் வாரிசு இருந்ததா? என்று திருப்பி கேட்கிறார்.. இப்படி அப்பா கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் தக்க பதிலை அளிக்கிறார் லிஜோமோல்.. கடைசியில் இரு காதல் பெண்களும் சிறகடித்து பறக்கிறார்கள். கடைசி காட்சியில், முகமூடி அணிந்து சில இளம்பெண்கள் அவர்களை துரத்துகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.. இந்த படத்தை தியேட்டரில் குடும்பத்துடன் பார்க்க முடியுமா? தனியாக பார்க்க முடியுமா? என்று கேட்டால், நிச்சயம் குடும்பத்துடன் பார்க்க முடியாது. ஏனென்றால், தவறான வழியை இந்த படம் காட்டுகிறது. எந்த தாயாவது இதை அனுமதிப்பார்களா? சினிமா தாயாக இருந்தாலும், சத்தியமாக இந்த திருமணத்தை அனுமதிக்க மாட்டார்கள்.
பொதுவுடைமை என்பது எல்லாருக்கும் எல்லாமுமானது.. ஆனால், காதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும்தான் உருவாக வேண்டும்.. அதுதான் இய்லபு.. இயல்புக்கு மாறான விஷயத்தை இந்த படத்தில் சொல்லி உள்ளார்கள்.. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.. ஒருவேளை, உங்களுக்கு படம் பிடித்திருந்தால், தாராளமாக பார்க்கலாம்.. புதிய படம் என்றாலும், வில்லங்கமான கதை" என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.