பிக்பாஸ் வீட்டில் முதல் சண்டை- அனல் பறக்கும் விவாதம்..!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே முதல்முறையாக விவாதம் ஏற்பட்டுள்ளது இன்றைய நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் பிக்பாஸ் புதிய சீசன் தொடங்கியது. நிகழ்ச்சியில் முதலில் தோன்றிய கமல்ஹாசன் புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டையும் போட்டியாளர்களையும் அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த சீசனில் மொத்தல் 18 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்கள் ஒருவர் திருநங்கை ஆவார். இதன்மூலம் பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை.
ஆரம்பம் முதலே போட்டியாளர்களை தேர்வு செய்ததில் சுவாரஸ்யம் இல்லை என்கிற விமர்சனம் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கேற்றார் போல கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி மந்தமாகவே இருந்தது.
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டுக்கான டாஸ்கில் இம்மான் அண்ணாச்சி பேசியது சில போட்டியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ப்ரோமோ வெளியானதை அடுத்து இன்றைய நிகழ்ச்சியை காண பார்வையாளர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் முதல் சண்டை என்று பதிவிட்டு, இந்த ப்ரோமோவை பல நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர்.