தமன்னாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு..!

 
1

இந்திய திரையுலகில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா . இவரது நடிப்பில் தற்போது ஒடேலா 2 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா தான் இந்தப் படத்தையும் இயக்க உள்ளார் .

இப்படத்தில் நடிகை தமன்னாவுடன் சேர்ந்து ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது .

காவி உடை, கையில் உடுக்கையுடன் பக்தி நிரம்பிய முகத்துடன் ஆன்மிக பயணத்தை தமன்னா மேற்கொள்வது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மறுபுறம் வழக்கம் போல் நம்ப தமிழ் ரசிகர்கள் அரசியல் ரீதியாக இந்த போஸ்டரை செமையாக கலாய்த்து வருகின்றனர் .

From Around the web