தீயாக பரவும்  ‘ஒன் 2 ஒன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... சுந்தர் சி படத்தில் இவரா..?

 
1

’தலைநகரம் 2’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சி நடிக்கும் புதிய படத்தை கே.திருஞானம் எழுதி இயக்குகிறார்… இவர் ‘த்ரிஷா’ நடிப்பில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக தமிழில் நடிக்கிறார் அனுராக்.

இப்படத்தில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.,இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது…நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என சொல்லப்படுகிறது.இந்த படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது…


 

From Around the web