விஜய் டிவி சீரியலில் எல்லை மீறிய முதலிரவுக் காட்சி..!

 
1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியலில் ரொமேண்டிக்காக எடுக்கப்பட்ட முதலிரவுக் காட்சி மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழில் சீரியல் ஒளிபரப்பில் முதன்மையாக இருக்கும் தொலைக்காட்சி விஜய் டிவி. பல்வேறு குடும்பங்களில் இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் ரொம்பவே பிரபலமாக உள்ளன.

அதுவும் மாலை 7 மணி முதல் இரவும் 10 மணி வரை பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முதன்மை பெற்று வருகின்றன. அந்த வகையில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ஈரமான ரோஜாவே.

அண்மையில் இந்த சீரியலில் வில்லத்தனம் செய்து வந்த ஜே.கே மற்றும் ரம்யாவுக்கு திடுதிப்பு என்று திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். இத்தொடரை ஆர்வமாக பார்த்து வந்த பார்வையாளர்களுக்கு இது சற்று அதிர்ச்சி தான் என்றாலும், ஏதோ ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

அதற்கு பின்பு நடந்தது தான்,தற்போது டிவி பார்வையாளர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது, திருமணமான கையுடன் ஜே.கே மற்றும் ரம்யாவுக்கு முதலிரவு நடந்தது. அப்போது ஒளிபரப்பான காட்சிகள் மிகவும் எல்லைமீறும் விதமாக இருந்ததாக பார்வையாளர்களிடையே கருத்து நிலவுகிறது.

குடும்பங்கள் பார்க்கக்கூடிய தொடர் என்பதால், பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகள் சிறார்களும் டிவி பார்ப்பார்கள். அதை உணர்ந்துகொண்டு தயாரிப்பாளர்கள் டிவி தொடர்களை உருவாக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

From Around the web