விஜய் சேதுபதியின் மகள் நடித்த ‘முகிழ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..!!

 
1

விஜய் சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகிழ்’. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். இந்தப் படத்தை புதுமுகம் கார்த்திக் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ரேவா என்ற பெண் இசையமைத்துள்ளார். சத்யா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கோவிந்தராஜ் எடிட்டராகப் பணியாற்றியுள்ளார். இவர் '96' படத்தில் எடிட்டராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘முகிழ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 

From Around the web