மீண்டும் பயில்வான் ஆட்டம் ஆரம்பம்..!  பிரேம்ஜிக்கு 1000 பவுன் நகை.. 4 பங்களாக்கள் வரதட்சணையா?

 
1

 பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரேம்ஜிக்கு ஆயிரம் பவுன் தங்க நகை மற்றும் 4 பங்களாக்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேம்ஜி மனைவி இந்து  என்றும்,வங்கியில் பணிபுரியும் அதிகாரி என்று மட்டுமே தகவல் வெளியான நிலையில் பயில்வான் ரங்கநாதன் இந்த திருமணம் குறித்து கூறுகையில் ’இது ஒரு காதல் திருமணம் என்றும் இருப்பினும் இந்த திருமணத்தில் வரதட்சணை கைமாறப்பட்டதாகவும் ஆயிரம் பவுன் தங்க நகை மற்றும் 4 பங்களாக்கள் பெண் வீட்டார் பிரேம்ஜிக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.ஒரு பவுன் தங்கம் விலை தற்போது ரூ.50,000, விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் 1000 பவுன் நகை என்பதெல்லாம் சாத்தியமா என்று பயில்வான் ரங்கநாதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். உருட்டாக இருந்தாலும் அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஆயிரம் பவுன் தங்க நகை மட்டும் இன்றி 4  பங்களாக்கள் வரதட்சணை என்பதெல்லாம் ஒரு சதவீதம் கூட உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் கற்பனையின் உச்சத்தில் சென்று உள்ளார் என்றும் இந்த வீடியோவுக்கு பலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.

மேலும் மணமகள் இந்து என்பவர் பிராமின் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதும் எந்த அளவுக்கு உருட்டு என தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

From Around the web