அச்சு அசலாக ஸ்ரீதேவியை போலவே இருக்கும் பெண்..! வைரலாகும் புகைப்படம்
                                    
                                     Dec 22, 2021, 08:05 IST
                                        
                                    
                                 
                                    
                                தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 80-களில் முன்னணி நடிகையாக அசத்தி வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் எப்போதுமே உண்டு. தமிழ்நாட்டை சேர்ந்த அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் சினிமாவை கலக்கியவர். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.
இந்நிலையில், அச்சு அசலாக நடிகை ஸ்ரீ தேவியை போலவே இருக்கும் பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளார்.
அவருடைய பெயர் தீபாலி சவுத்ரி. தீபாலி சவுத்ரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த இண்டர்நெட் பயனாளர்கள் சிலர் இந்த பெண் அச்சு அசல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போலவே இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 30 ஆயிரம் மக்கள் பின்தொடருகிறார்கள்.
 - cini express.jpg)